ஆப்நகரம்

சசிகலா அவசர ஆலோசனை: கூவத்தூர் விடுதிக்குள் நுழைந்த அதிரடிப்படை

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

TNN 14 Feb 2017, 11:39 am
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மூவருக்கும் ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil police special force enters into koovathur resort
சசிகலா அவசர ஆலோசனை: கூவத்தூர் விடுதிக்குள் நுழைந்த அதிரடிப்படை


மூவரும் உடனடியாக சரணடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கூவத்தூரில் எம்எல்ஏக்களுடன், சசிகலா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையில் எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள விடுதிக்கு 4 பேருந்துகளில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்தனர். இதையடுத்து காவல்துறையினர் விடுதிக்குள் நுழைந்துள்ளனர். சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் இருக்க அதிரடிப்படை அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Police special force enters into Koovathur resort.

அடுத்த செய்தி