ஆப்நகரம்

கும்பகோணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2300 மதுபாட்டில்கள் பறிமுதல்!

கும்பகோணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2300 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Samayam Tamil 13 Apr 2019, 1:25 pm
காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்டு கும்பகோணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2300 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Samayam Tamil கும்பகோணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2300 மதுபாட்டில்கள் பறிமுதல்!
கும்பகோணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2300 மதுபாட்டில்கள் பறிமுதல்!


தமிழகத்தில் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 16-ம் தேதியிலிருந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன. இந்நிலையில் காரைக்காலில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு, ஸ்ரீராம் நகரில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நேற்று நள்ளிரவு தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் முருகவேல் தலைமையிலான தனிப்படை போலீசார், ஸ்ரீராம் நகர் மாரிமுத்து என்பவர் வீட்டில் 49 அட்டைப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2352 குவாட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் சந்தை மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். மது பாட்டில்களை பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாரிமுத்து என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதை பயன்படுத்தி, அதிக விலைக்கு விற்பதற்காக மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது..

அடுத்த செய்தி