ஆப்நகரம்

கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் இன்று; கல்வி வளர்ச்சி நாள்...!

கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக இன்று கொண்டாடப்படுகிறது.

TNN 15 Jul 2017, 10:55 am
சென்னை: கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக இன்று கொண்டாடப்படுகிறது.
Samayam Tamil politician kamarajar birth anniversary today
கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் இன்று; கல்வி வளர்ச்சி நாள்...!


குடும்ப வறுமையால் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்த காலம் ஒன்றுண்டு. அப்போது, மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து, பிள்ளைகளை பள்ளிக்கு வரச் செய்த கர்மவீரர் காமராஜர். கல்விக்காக பல்வேறு சலுகைகளை அளித்து, முன்னேற்றப் பாதைக்கு அழைத்து சென்ற காரணத்தால் காமராஜரின் பிறந்தநாளை ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகிறோம். எளிமையான வாழ்க்கையை பேணி, குறைவான பேச்சால் நிறைவான ஆட்சி நடத்தியவர்.

இன்றைய தமிழக கிராமங்கள் பள்ளிக் கூடங்கள், பேருந்து போக்குவரத்து, மின்சார விளக்குகளால் ஜொலிப்பதற்கு காமராஜரின் ஆட்சி முக்கிய காரணம். உயர்கல்விக்கு செல்வதில் 12% மட்டுமே உள்ள இந்தியாவில், 17%க்கும் அதிகமாக உயர்கல்வியில் ஈடுபட உழைத்தவர் காமராஜர். அவரது எளிமையும், ஆட்சி முறையும், மக்கள் மீதான அக்கறையும் காலந்தோறும் எடுத்துக்காட்டாய் திகழும் என்பதில் சந்தேகமில்லை.

Politician Kamarajar birth anniversary today.

அடுத்த செய்தி