ஆப்நகரம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: இருவர் மீது குண்டர் சட்டம் ரத்து!!

பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட இளம் பெண்களை காதல் வசப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் கீழ் இருவர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Samayam Tamil 2 Nov 2019, 4:36 pm
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தேசிய அளவில் பெரிய அளவில் அதிர்வை ஏற்படுத்தி இருந்தது. சுமார் 200க்கும் அதிகமான இளம் பெண்களை காதல் வசப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
Samayam Tamil Pollachi 2


இந்த வழக்கு காவல்துறையிடம் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தமிழக அரசும் சிபிஐக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது. ஆனால், சிபிஐ ஏற்கும் வரை சிபிசிஐடி இந்த வழக்கை விசாரிக்கும் என்று கூறப்பட்டது.

கைது செய்யப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் உள்பட நான்கு பேர் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்கு பதியுமாறு கோவை மாவட்டக் கலெக்டர் மார்ச் 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். இவர்கள் நான்கு பேரும் கோவை மாவட்ட அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது சரிதான் என்று அறிவுரைக் கழகம் தெரிவித்தது.

பசும்பொன் முத்துராமலிங்கர் சிலையின் தங்க கவசத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..! ஏன்?

இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு சபரிராஜனின் தாய் லதா, திருநாவுக்கரசுவின் தாய் பரிமளா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தனர்.

அந்த மனுவில், ''குண்டர் சட்டம் பாய்வது குறித்து எங்களுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை. அப்படி ஒரு சட்டத்தில் எங்களது மகன்களை அடைக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண சட்டமே போதும். எங்களது மகன்கள் ஜாமீன் கோரவில்லை. எந்த நீதிமன்றத்திலும் அதற்கான மனு நிலுவையில் இல்லை. நீதிமன்றக் காவலில் இருந்து அவர்களை வெளியே எடுக்கவும் முடியாது. இந்த நிலையில் அவர்கள் மீது குண்டர் சட்டம் தேவையில்லாதது'' என்று தெரிவித்து இருந்தனர்.

சென்னை: லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து; நடத்துநர் பலி, 15 பேர் காயம்!

இதையடுத்து சபரி ராஜன், திருநாவுக்கரசு மீதான குண்டர் சட்டத்தை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆ.எம்.டி. டீக்கா ராமன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் ரூ. 8120 கோடியில் 21 புதிய தொழிலுக்கு அனுமதி!!

இவர்கள் இருவர் தவிர மற்ற இருவர்களான சதீஷ் மற்றும் வசந்தகுமார் மீது குண்டர் சட்டம் ரத்து செய்யப்படவில்லை.

அடுத்த செய்தி