ஆப்நகரம்

Pollachi Case: பொள்ளாச்சி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிக்கு சிபிசிஐடி சம்மன்

பொள்ளாச்சி வன்கொடுமை விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர்களில் ஒருவரான மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

Samayam Tamil 21 Mar 2019, 10:48 am
பொள்ளாச்சி வன்கொடுமை விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர்களில் ஒருவரான மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.
Samayam Tamil பொள்ளாச்சி விவகாரம்: காங்கிரஸ் நிர்வாகியிடம் சிபிசிஐடி விசாரணை


இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி வந்த 4 பேர் பொள்ளாச்சியில் கைது செய்யப்பட்டனர். இந்த கொடூரச் சம்பவத்திற்கு திருநாவுக்கரசு மூலையாக இருந்தது செயல்பட்டது தெரியவந்தது.

இதை தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறை அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்தது. மேலும், திருநாவுக்கரசுக்கு சொந்தமான இடங்களில் சோதானை நடத்தப்பட்ட பல்வேறு முக்கிய ஆதாரங்கள் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சதீஷ், வசந்த், சபரி ஆகியோரையும் சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் திருநாவுக்கரசிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்களை வெளியிட்டதாக செய்திகள் வெளிவந்தன.

இதையடுத்து தமிழக காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில், வரும் 25ம் தேதிக்குள் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக அவர் விசாரணைக்கு ஆகவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம்பெண் ஒருவரை காரில் கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சம்பவம் நடந்த பிப்.12 அன்று குற்றவாளி திருநாவுக்கரசு, மயூரா ஜெயக்குமாரை சந்தித்து வாழ்த்து கூறியதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் சிபிசிஐடி காவல்துறை மயூரா ஜெயக்குமாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி காவல்துறை அழைப்பாணை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நகர்வு பொள்ளாச்சி விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி