ஆப்நகரம்

ஒரு குடும்பம் தமிழகத்தையே கொள்ளையடித்து வைத்துள்ளது.! பொன் ராதாகிருஷ்ணன்

மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதா வீட்டில் நடந்த சோதனையில் தவறேதும் இல்லை என, மத்திய இணையமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

TNN 18 Nov 2017, 12:15 pm
மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதா வீட்டில் நடந்த சோதனையில் தவறேதும் இல்லை என, மத்திய இணையமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil pon radhakirishanan says one family looted entire tamil nadu
ஒரு குடும்பம் தமிழகத்தையே கொள்ளையடித்து வைத்துள்ளது.! பொன் ராதாகிருஷ்ணன்


சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீட்டில் கடந்த வாரத்தில் இருந்து வருமானவரித்துறையினர் தொடர்ந்து, சோதனை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று போயஸ் கார்டனில் சோதனை நடத்தப்பட்டது . இதனை கண்டித்து டிடிவி தினகரன் பல கருத்துக்கள் கூறியுள்ளார்.

மேலும் மோடியின் வருகைக்கு பிறகு இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதாகவும் , இதற்கு பின்னால் மத்திய அரசின் சதி இருப்பதாகவும் கூறினார்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர், பொன்ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது’ போயஸ் கார்டனில் நடைபெற்ற வருமானவரி சோதனை ஆதாரத்தின் அடிப்படையில் நடைபெற்றது. இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கொள்ளையடித்து வைத்துள்ளனர்.



தமிழகத்தில் நடைபெறும் வருமானவரி சோதனை வரவேற்க கூடியது. சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனை முடிவு ஆய்வில் உள்ளது. தமிழக கவர்னர் பன்வாரிலால், மாவட்டங்களில் ஆய்வு தான் செய்கிறார். அவர் நிர்வாகம் செய்யவில்லை என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்கூறியுள்ளார்.

அடுத்த செய்தி