ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கல்: மன்னிப்பு கேட்டார் பொன்.ராதாகிருஷ்ணன்

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியாமல் போனதற்காக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

TNN 13 Jan 2017, 11:33 pm
சென்னை: ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியாமல் போனதற்காக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
Samayam Tamil pon radhakrishnan apologies over jallikattu issue
ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கல்: மன்னிப்பு கேட்டார் பொன்.ராதாகிருஷ்ணன்


தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் குற்றம்சாட்டி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதிக்கவேண்டும் என்று விலங்குகள் நலவாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த 2014ஆம் ஆண்டு இந்த வழக்கின் மீதான விசாரணையில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஆணையை பெற தமிழக அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தியே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் இளைஞர்களும் பல மாவட்டங்களில் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரும் வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் பொங்கலுக்கு முன் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சாதகமான முடிவு எடுக்கப்பட வாய்ப்பில்லை என்று அறிவித்தது.

இதனிடையே சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஜல்லிக்கட்டு நடத்த முடியாததற்கு மன்னிப்பு கோருகின்றேன் தெரிவித்துள்ளார். மேலும், ஜல்லிக்கட்டு நடத்த முடியாததால் பொங்கல் கொண்டாட மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி