ஆப்நகரம்

திமுக விலக்கி வைத்தாலும் மதிமுக, விசிக விலகும் நிலையில் இல்லை- பொன். ராதா தாக்கு

சென்னை: திமுக ஒதுக்கி வைத்தாலும் மதிமுகவும், விசிகவும் விலகும் நிலையில் இல்லை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Samayam Tamil 5 Dec 2018, 11:35 am
திமுக ஒதுக்கி வைத்தாலும் அவர்களை விட்டு விலகும் நிலையில் மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் இல்லை என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
Samayam Tamil pon-radha


சென்னை விமான நிலையத்தி செய்தியாளர்களை சந்தித்த அவர், மேகதாட்டுவில் காவிரிக்கு அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. அணை கட்ட வேண்டி கர்நாடகா அரசு செய்த முயற்சிக்கு ஆய்வறிக்கை தாக்கல் செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க யாருக்கும் அருகதை கிடையாது. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒன்றரை லட்சம் தமிழகர்களை கொன்று குவிக்க துணை நின்றவர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி