ஆப்நகரம்

ரஜினி எப்படி இருந்தால் கமலுக்கு என்ன?- பொன்.ராதாகிருஷணன்

காவி நிறத்தை கொச்சைப்படுத்த வேண்டாம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷணன் கூறியுள்ளார்.

Samayam Tamil 12 Feb 2018, 6:32 pm
காவி நிறத்தை கொச்சைப்படுத்த வேண்டாம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷணன் கூறியுள்ளார்.
Samayam Tamil pon radhakrishnan criticis actor kamal haasan
ரஜினி எப்படி இருந்தால் கமலுக்கு என்ன?- பொன்.ராதாகிருஷணன்


அமெரிக்காவின் ஹார்வட் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கமல், “ரஜினி ஆன்மிக அரசியல் எல்லாம் சரிதான். ஆனால் அது காவி அரசியலாக இருக்காது என நம்புகிறேன். அப்படி இருந்தால் அவருடன் கூட்டணி கிடையாது.” என கூறினார்.

இந்நிலையில், நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “காவி என்பது சுயநலம் இல்லாதவர்கள் ஏற்றுக் கொண்ட நிறம். கமல் காவிக்கு மாறமாட்டேன் என்பது சுயநலம். எப்படி இருந்தாலும் காவியை கொச்சைப் படுத்த வேண்டாம்” என்றார்.

அடுத்த செய்தி