ஆப்நகரம்

அவர்கள் மனிதராக பிறப்பதற்கே தகுதி அற்றவர்கள்..! - பொன்னார் ஆத்திரம்

விழுப்புரம் சிறுமியை கொலை செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை சீக்கிரம் வழங்கிட வேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Samayam Tamil 12 May 2020, 6:59 pm
விழுப்புரத்தில் 10ம் வகுப்பு மாணவியை எரித்துக் கொலை செய்தவர்கள் மனிதனாக பிறப்பதற்கு தகுதியற்றவர்கள். இவர்கள் மீது எந்த ஈவு இரக்கம் பாராமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
Samayam Tamil பொன். ராதாகிருஷ்ணன்


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரை இன்று சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன், கொரானாவால் பாதிக்கப்பட்ட கேரள எல்லையை ஒட்டியுள்ள விரிகோடு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் வங்கிகளில் பணம் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அந்த பகுதியில் ஏடிஎம் மையங்களை அமைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வைத்து நடவடிக்கைகளை எடுக்கக்கோரி வலியுறுத்தினார்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விழுப்புரத்தில் பத்தாம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மனிதனாக பிறப்பதற்கு தகுதியற்றவர்கள்.

ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு விவகாரம்: மத்திய அமைச்சருக்கு அன்புமணி கடிதம்!!

இவர்கள் மீது ஈவிரக்கமில்லாமல் கடும் நடவடிக்கை எடுத்து உச்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும், ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளதால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று கூறினார்.

விழுப்புரம் சம்பவத்துக்கு திராவிட கட்சிகள் உட்பட தமிழகத்தில் உள்ள அணைத்து கட்சிகளும் கண்டனத்தை தெரிவித்ததோடு, விரைவு விசாரணைக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

அடுத்த செய்தி