ஆப்நகரம்

ஆர்.கே நகரில் பாஜக தான் வெல்லும்; தமிழகத்தில் மோடி அலை வீசுகிறது - பொன்.ராதா

தமிழக இளைஞர்களின் மனதில் மோடி அலை வீசுகிறது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

TNN 14 Mar 2017, 12:14 pm
சென்னை : தமிழக இளைஞர்களின் மனதில் மோடி அலை வீசுகிறது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil pon radhakrishnan says modi wave in tn youths
ஆர்.கே நகரில் பாஜக தான் வெல்லும்; தமிழகத்தில் மோடி அலை வீசுகிறது - பொன்.ராதா


பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது :
தமிழக அரசியலில் பெரிய வெற்றிடம் காணப்படுகிறது. 50 ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லை. மக்களிடம் அதிருப்தியே உள்ளது. இப்போது மக்களின் தேடலாக பாஜக உள்ளது.

வடமாநிலத்தில் பாஜக பெற்ற தேர்தல் வெற்றி மோடியின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி. நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. குறிப்பாக தமிழக இளைஞர்களின் மத்தியில் அதிகளவில் மோடி அலை வீசுகிறது. இதனால் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும். விரைவில் கழகங்கள் இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடக்கும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி