ஆப்நகரம்

புதுச்சேரியில் நிழல் இல்லா நாள் நிகழ்வை கண்டு ரசித்த மாணவர்கள்

இந்த அரிய வானியல் நிகழ்வை பள்ளி மாணவ மாணவிகள் பார்க்க புதுச்சேரி அரசின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை 20 இடங்களில் ஏற்பாடு செய்திருந்தது.

Samayam Tamil 21 Apr 2019, 5:40 pm
புதுச்சேரியில் மாணவ, மாணவியர் நிழல் இல்லா நாள் வானியல் நிகழ்வை ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
Samayam Tamil 2a7c354d94586f0033a499574b4f4975


சூரியன் செங்குத்தாக வரும்போது ஓர் இடத்திலுள்ள ஒரு பொருளுடைய நிழலின் நீளம் ஆண்டுக்கு இருமுறை பூஜ்ஜியமாகிறது. இந்த நிகழ்வு நடக்கும் நாளே நிழல் இல்லா நாள் எனப்படுகிறது.

மகர ரேகைக்கு 23.45 டிகிரி தெற்கிலும் கடக ரேகைக்கு 23.45 டிகிரி வடக்கிலும் உள்ள நாடுகளில் மட்டுமே இந்த நிகழ்வைக் காண முடியும். புதுச்சேரியில் பகல் 12:14 மணியிலிருந்து 12.17 வரை இந்த அரிய நிகழ்வு ஏற்பட்டது.

நிழல் குறுகுவதைக் காணும் மாணவிகள்


இந்த அரிய வானியல் நிகழ்வை பள்ளி மாணவ மாணவிகள் பார்க்க புதுச்சேரி அரசின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை 20 இடங்களில் ஏற்பாடு செய்திருந்தது. அந்த இடங்களில் ஏராளமான பள்ளி மாணவ மாணவியர் கூடி நிழல் இல்லா நாள் நிகழ்வைக் கண்டு ரசித்தார்கள்.

அடுத்த செய்தி