ஆப்நகரம்

"பொது விடுமுறை பட்டியலிலிருந்து பொங்கல் நீக்கம்":மத்திய அரசு அறிவிப்பு..!

மத்திய அரசு ஊழியர்களுக்கான பொது விடுமுறை பட்டியலிலிருந்து பொங்கல் பண்டிகையை நீக்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TNN 9 Jan 2017, 7:12 pm
மத்திய அரசு ஊழியர்களுக்கான பொது விடுமுறை பட்டியலிலிருந்து பொங்கல் பண்டிகையை நீக்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Samayam Tamil pongal removed from central government genaral holiday list
"பொது விடுமுறை பட்டியலிலிருந்து பொங்கல் நீக்கம்":மத்திய அரசு அறிவிப்பு..!


இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”பொது விடுமுறை பட்டியலிலிருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்படுகிறது.பொங்கல் பண்டிகையை கொண்டாடும் அரசு ஊழியர்கள்,அந்த நாளன்று விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்,”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வலுத்துள்ளன.இந்நிலையில் பொங்கலை பொது விடுமுறை பட்டியலிலிருந்து மத்திய அரசு நீக்கியுள்ளதால்,தமிழர்களுக்கு எதிரான போக்கை மத்திய அரசு கடைபிடிப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த அறிவிப்பு பல நாட்களுக்கு முன்னரே வெளியிடப்பட்டுள்ளது.ஆனால் தற்போது பொங்கலுக்கு விடுமுறை எடுக்க மத்திய அரசு ஊழியர்கள் முயற்சி செய்யும் போதுதான்,இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Pongal removed from central government genaral holiday list

அடுத்த செய்தி