ஆப்நகரம்

சிறுமியின் மருத்துவ செலவை ஏற்காத சமூக நலத்துறை; பெற்றோர் போராட்டம்

விழுப்புரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு தற்காலிக பார்வை குறைபாடு ஏற்பட்டது. இதற்கு மருத்துவ செலவுக்கு சமூக நலத்துறை நிதி அளிக்கவில்லை எனக் கூறி அச்சிறுமியின் பெற்றோர் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.

Samayam Tamil 5 Mar 2019, 12:46 am
விழுப்புரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு தற்காலிக பார்வை குறைபாடு ஏற்பட்டது. இதற்கு மருத்துவ செலவுக்கு சமூக நலத்துறை நிதி அளிக்கவில்லை எனக் கூறி அச்சிறுமியின் பெற்றோர் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.
Samayam Tamil o-SAD-CHILD-facebook


விழுப்புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மகேஷ். அவரது மனைவி செண்பகம். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். செண்பகவேல் என்ற மகனும் காயத்ரி, மோனிஷா என்ற மகள்களும் இவர்களுக்கு உள்ளனர்.

கடந்த பிப்., 13 அன்று அங்கன்வாடி வளாகத்தில் விளையாடிக் கொண்டு இருந்த காயத்ரி கீழே விழுந்ததில் அவரது இடது கண்ணில் மூங்கில் வேலி குத்தி காயம் ஏற்பட்டது.

உடனே அவரது பெற்றோர் காயத்ரியை புதுசேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். காயத்ரி கண்ணில் சிக்கிய மூங்கில் துணுக்கை மருத்துவர்கள் அகற்றினர். ஆனால் சிறுமிக்கு தற்காலிக பார்வை கோளாறு ஏற்பட்டது.

அறுவைசிகிச்சைக்கு பணம் இல்லாத நிலையில் சிறுமி மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

காயத்ரியின் சிகிச்சைக்கு அங்கண்வாடி தொழிலாளிகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சகம் உதவ மகேஷ் வலியுறுத்தினார். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் சிறுமியின் பெற்றோர் ஆட்சியர் அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழ் விசாரித்தது. சமூக நலத்துறை அலுவலர் எஸ் கே லதா கூறுகையில், சிறுமிக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவ நாங்கள் பரிந்துரைத்துள்ளோம் என்றார்.

அடுத்த செய்தி