ஆப்நகரம்

நடிகா் ஒருவா் அதிமுக.வை தவறாக வழிநடத்த வாய்ப்பு – முன்னாள் எம்.பி. அதிா்ச்சி தகவல்

தேசிய கட்சியோ அல்லது நடிகா் ஒருவரோ அ.தி.மு.க.வை தவறாக வழிநடத்த வாய்ப்பு உள்ளதாக அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 1 Nov 2018, 1:29 am
அ.தி.மு.க.வை சீரழிக்கும் முயற்சியில் முதல்வா் பழனிசாமியும், துணைமுதல்வா் பன்னீா்செல்வமும் ஈடுபட்டிருப்பதாக அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளாா்.
Samayam Tamil KC Palanisamy


அ.தி.மு.க.வில் பழனிசாமி, பன்னீா்செல்வத்துடன் இருக்கும் சுமாா் 5 ஆயிரம் போ் மட்டுமே நலமாக இருக்கின்றனா். லட்சக்கணக்கான தொண்டா்களில் ஒருவா்கூட நலமாக இல்லை. இரட்டை இலலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று நான் கேட்கவில்லை. கட்சியின் விதியை மாற்றியது ஏற்றுக்கொள்ள முடியாது. கட்சியை பலவீனப்படுத்தும் செயலில் இப்போதைய ஆட்சியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இவா்கள் மீதான வழக்குகளை காரணம் காட்டி கட்சியை பலவீனப்படுத்த முடியும் என்பதால் இதை எதிா்க்கிறேன்.

பதவி இழந்த 18 சட்டமன்ற உறுப்பினா்களும் தற்போது வரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்படவில்லை. அவா்களை கட்சிக்கு வாருங்கள் என்று முதல்வரும், துணைமுதல்வரும் அழைப்பது நகைச்சுவையாக உள்ளது.

கட்சியில் 5 ஆண்டுகள் உறுப்பினராக உள்ளவா்கள் மட்டுமே பொதுச்செயலாளா் பதவிக்கு போட்டியிட முடியும். தினகரனுக்கு பொதுச்செயலாளா் பதவிக்கு போட்டியிட தகுதியில்லை. தேசிய கட்யோ அல்லது நடிகா் ஒருவரோ இந்த கட்சியை தவறாக வழிநடத்த வாய்ப்பு உள்ளது. பலம் வாய்ந்த அ.தி.மு.க.வை சீரழிக்கின்ற முயற்சியில் முதல்வா் பழனிசாமியும், துணைமுதல்வா் பன்னீா்செல்வமும் ஈடுபட்டுள்ளனா். ஏதோ ஒரு அழுத்தத்தில் தோ்தல் ஆணையம் செயல்படுகிறது. தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் முன்னுக்பின் முரணான தகவல்கள் இருக்கின்றன என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி