ஆப்நகரம்

Tamil Nadu Rains: தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வெப்பநிலை அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியசும் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 6 May 2019, 5:38 pm
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil rainnnnn


தமிழகத்திற்கு ஃபானி புயல் போதிய மழை தராமல் ஏமாற்றிச் சென்றுவிட்டது. ஆனால் அதிகப்படியான காற்றை அளித்து, கடந்த இரு நாட்களாக ஏராளமான மின்சாரம் தயாரிக்க உதவி புரிந்துள்ளது.

கடந்த மே ஒன்றாம் தேதி மட்டும் 74 மில்லியன் அளவிற்கு காற்றாலை மின்சாரத்தை பெற்றுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம்தெரிவித்துள்ளது. அடுத்த நாளான மே 2ஆம் தேதி 90 MU அளவிற்கு மின்சாரம் அளித்துள்ளது.

இது தமிழகத்திற்கு தேவைப்படும் ஒட்டுமொத்த மின் தேவையை விட, 25% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மின்சாரம் ஆனது மே மாதத் தொடக்கத்தில் புதிய உச்சம் ஆகும். கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் மிகக்குறைந்த அளவு மின்சாரம் உற்பத்தியானது குறிப்பிடத்தக்கது.

உள் தமிழக மாவட்டங்களில் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 8 சென்டிமீட்டரும், வேலூரில் 5 சென்டிமீட்டரும், கிருஷ்ணகிரி மாவட்டம் பேனுகொண்டபுரத்தில் 3 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் வெப்பநிலை அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியசும் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி