ஆப்நகரம்

ஒரு உரையில் இரு கத்திகள்: தமிழக அரசியலில் சாத்தியமா?

இரு வேறு தலைமை என்பது தமிழக அரசியல் களத்தில் சாத்தியமாகுமா எனும் விவாதம் ஓபிஎஸ், இபிஎஸ் விவகாரத்தில் மீண்டும் எழுந்துள்ளது.

Samayam Tamil 6 Oct 2020, 4:09 pm
அதிமுகவில் நடைபெறும் அதிகாரப் போட்டி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை பற்றவைத்துள்ளது. முதல்வர் வேட்பாளர் யார் என்று நாளை அறிவிக்கப்பட்டுவிடும் என்று கூறப்பட்டுள்ளது.
Samayam Tamil ops eps


“நான் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றால் கட்சி, ஆட்சி இரண்டும் வெவ்வேறு தலைமை வசம் இருக்கும்” என அறிவித்தார் ரஜினிகாந்த். ஆட்சி சுதந்திரமாக செயல்படவேண்டும், கட்சியின் தலையீடு இருக்காது என்று கூறினார்.

தமிழ்நாட்டில் இதெல்லாம் சாத்தியமா என்ற கேள்வி அப்போதே எழுப்பப்பட்டது. ஆனால் இந்தியாவில் தேசிய கட்சிகளில் கட்சி தலைமை ஒருவரிடத்திலும் ஆட்சி தலைமை ஒருவரிடத்திலும் இப்போதும் செயல்பட்டு வருகிறது.

தமிழக பள்ளிகள் திறப்பு: இன்று தேதி தெரிந்துவிடும்?

முதல்வர், துணை முதல்வர் என ஆட்சியில் இருவரும் பதவி வகிக்கும் போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என கட்சியிலும் பதவியை பங்குபோட்டுக் கொண்டே நான்கு ஆண்டுகளை நிறைவு செய்யப்போகின்றனர் பழனிசாமியும் பன்னீர் செல்வமும்.

துணை முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவி வகித்தாலும் ஒட்டுமொத்த அதிகாரமும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடத்தில்தான் குவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவி ஓபிஎஸ் வசம் இருந்தாலும், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் என பல்வேறு பதவிகள் மேல் மட்டத்தில் உள்ளதால் தன்னிச்சையாக அவரால் எந்த பெரிய முடிவையும் எடுக்க முடியாத நிலையே உள்ளது.

இந்நிலையில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க எடப்பாடி தரப்பு அழுத்தம் கொடுக்க அதற்கு ஆதரவாக அமைச்சர்கள் பலர் ஆதரவாக நிற்கின்றனர்.

இந்த முறையும் விட்டால் பின் அதிமுகவில் தனது நிலை எப்போதும் நம்பர் 2 ஆகிவிடும் என்ற பயம் ஓபிஎஸ்ஸுக்கு இருக்கிறது.

அடேயப்பா, இரண்டு நாள்கள் கொட்டித் தீர்க்கப் போகும் மழை!

அதிமுகவில் மட்டும் தான் இந்த நிலைமை என்றால் தமிழகத்தில் எந்த கட்சியிலும் இரட்டை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை. அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என கடந்த காலத்தில் கட்சி, ஆட்சி இரண்டிலும் ஒற்றை தலைமைதான் இருந்துள்ளது.

இந்த முறை தமிழகத்திற்கு சரிவராது என்று புரிந்துகொண்டதாலேயே பழனிசாமியும், பன்னீர் செல்வமும் தாங்களே தலைமை என அறிவிக்கத் தொடங்கிவிட்டனர்.

அடுத்த செய்தி