ஆப்நகரம்

எட்டு நாட்கள் இருளில் மூழ்கிய திருத்துறைப்பூண்டி!

வெள்ளி இரவில் மடப்புரம், ஆத்தூர் ரோடு, மன்னார்குடி சாலை, ரயில்வே ஸ்டேசன் சாலை, முனிசிப் கோர்ட் தெரு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் மீண்டும் தொடங்கியது.

Samayam Tamil 24 Nov 2018, 2:11 pm
எட்டு நாட்களுக்கு இருட்டில் தவித்த திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மீண்டும் மின்விநியோகம் கிடைத்துள்ளது.
Samayam Tamil 201811191527461505_gaja-cyclone-karaikal-district-4th-day-villagers-are-living_SECVPF


கஜா புயலால் திருவாரூர் மாவட்டத்தின் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. காற்றில் முறிந்து விழுந்த மரங்களாலும் மின் கம்பங்களாலும் பெரும்பலான இடங்களில் மின்விநியோகமும் தடைபட்டது.

இதனால் கடந்த எட்டு நாட்களாக இரவு நேரங்களில் நகரின் பெரும்பகுதியும் இருளில் மூழ்கியுள்ளது. இதனை சரிசெய்ய மின்வாரிய ஊழியர்கள் இரவு பகலாக மின்சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர்.

இதையடுத்து, வெள்ளி இரவில் மடப்புரம், ஆத்தூர் ரோடு, மன்னார்குடி சாலை, ரயில்வே ஸ்டேசன் சாலை, முனிசிப் கோர்ட் தெரு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் மீண்டும் தொடங்கியது.

பெரும் போராட்டத்துக்குப் பின் சரிந்து கிடந்த ராட்சத மரங்கள் பல அகற்றப்பட்டுள்ளன. இதனால் பேருந்துகளும் வழக்கம் போல இயங்குகத் தொடங்கியுள்ளன. இதனால் மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

இருப்பினும் கடைகள் வைத்திருந்தவர்கள் சேதமான கடைகளை இன்னும் சரிசெய்யும் பணியை செய்து வருகின்றனர். இதனால் பல கடை வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

அடுத்த செய்தி