ஆப்நகரம்

பிரகாஷ் ஜவடேகர் மீண்டும் சென்னை வருகை

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் மீண்டும் சென்னை வந்துள்ளார்.

TNN 3 Mar 2016, 11:36 am
சென்னை: தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் மீண்டும் சென்னை வந்துள்ளார்.
Samayam Tamil prakash javadekar came back to chennai
பிரகாஷ் ஜவடேகர் மீண்டும் சென்னை வருகை


சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மீண்டும் சென்னை வந்துள்ள அவர், இன்னும் சற்று நேரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து கூட்டணி தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, கடந்த முறை தமிழகம் வந்திருந்த அவர், தேமுதிக உள்ளிட்ட பல கட்சிகளை சந்தித்து கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொடர்ந்து, தேமுதிக தரப்பில் பிரகாஷ் ஜவடேகருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கூட்டணி அமைப்பது தொடர்பாக தேமுதிக உள்ளிட்ட கட்சிகளிடம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் மீண்டும் சென்னை வந்துள்ளார்.

தேமுதிக-வை பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணிக்கு அழைத்து வரும் நிலையில், பாஜக-வும் தங்களது தரப்பில் முனைப்பு காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி