ஆப்நகரம்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தொடக்கம்

சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தநிலையில், தமிழகத்தில் தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தொடங்கியுள்ளன.

TNN 2 Jun 2016, 7:12 pm
சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தநிலையில், தமிழகத்தில் தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தொடங்கியுள்ளன.
Samayam Tamil preparations started for local civic body election tamil nadu
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தொடக்கம்


தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி போன்றவற்றின் மேயர், தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, சுமார் ஒரு லட்சத்துக்கும் மேலான பதவிகள் உள்ளாட்சியில் காலியாக உள்ளன.

எனவே, உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான முதல்கட்ட பணிகளை தேர்தல் அணையம் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக, தமிழக தேர்தல் ஆணையர் சீதாராமன் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதேபோன்று, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தேர்தல் அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகத்தினரும் கூடி ஆலோசித்தனர்.

தமிழகம் முழுவதும் இத்தகைய ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கும் என்றும், இதன் முடிவாக, ஜூலை மாதத்தின் இறுதியில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும், தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி