ஆப்நகரம்

தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பின்பு உயா்த்தப்படும் மதுபானங்களின் விலை

பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று தொிவிக்கப்பட்டிருந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பின்னா் தமிழகத்தில் மதுபானங்களின் விலையை உயா்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

TOI Contributor 11 Oct 2017, 7:25 pm
பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று தொிவிக்கப்பட்டிருந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பின்னா் தமிழகத்தில் மதுபானங்களின் விலையை உயா்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது
Samayam Tamil price of alcoholic beverages after 3 years in tamil nadu
தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பின்பு உயா்த்தப்படும் மதுபானங்களின் விலை


தமிழக அமைச்சா் அவைகளின் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் அரசுக்கான வருவாயை பெருக்கும் விதமாக மதுபானங்களின் விலையை உயா்த்தி அமைச்சரவை அறிவிப்பு வெளியிட்டது. இதன் அடிப்படையில், குவார்டர் பாட்டிலின் விலை ரூ.10 அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என அரசு அதிகாரி ஒருவர் தொிவித்துள்ளார். கடைசியாக கடந்த 2014 நவம்பரில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது.

டாஸ்மாக் மதுபானங்கள் தரத்துக்கு ஏற்ப சாதாரணமானவை, நடுத்தரமானவை, பிரீமியம் தரம் கொண்டவை என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. விலையேற்றத்திற்குப் பின்னர் சாதாரண ரக மதுபானம் ஒரு குவார்டர் (180 மி.லி.) ரூ.100-க்கு விற்கப்படும். தற்போது இது ரூ.88-க்கு விற்பனையாகிறது.

நடுத்தர வகையிலான மதுபானம் ஒரு குவார்டர் பாட்டிலின் விலை 10 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.110-க்கு விற்கப்படும். பிரீமியம் தர மதுபானம் ரூ.120க்கு விற்கப்படுகிறது. இதன் விலை பிராண்டைப் பொறுத்து ஒரு குவார்ட்டர் பாட்டில் ரூ.380 வரை விற்கப்படும் எனக் கூறப்படுகிறது.

டாஸ்மாக் மூலம், சராசரியாக வார நாட்களில் ரூ.70 கோடிக்கும் வார இறுதி மற்றும் விழாக்காலங்களில் ரூ.90 கோடி முதல் ரூ.100 கோடி வரையிலும் மதுபானம் விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2016 – 17 காலகட்டத்தில் மதுபான விற்பனை மூலமான வருவாய் ரூ.26 ஆயிரத்து 995 கோடி.

அடுத்த செய்தி