ஆப்நகரம்

அம்பேல் ஆன அம்மாவின் விலையில்லா ஆடு வழங்கும் திட்டம் - தமிழக அரசு அறிவிப்பு

வறட்சி காரணமாக விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை அறிவித்துள்ளது.

TNN 11 Jul 2017, 2:38 pm
சென்னை : வறட்சி காரணமாக விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை அறிவித்துள்ளது.
Samayam Tamil priceless goat scheme stopped by tamil nadu
அம்பேல் ஆன அம்மாவின் விலையில்லா ஆடு வழங்கும் திட்டம் - தமிழக அரசு அறிவிப்பு


இதுகுறித்து சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில், “தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தொடங்கி வைத்த இந்த திட்டம் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வறட்சி காரணமாக விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
போதிய மழை பெய்த பின், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பேல் ஆன ஆடு திட்டம்:
அம்மாவின் திட்டத்தை அனைத்தையும் நிறைவேற்றுவதாக கூறும் தற்போதுள்ள முதல்வர், ஜெயலலிதாவின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி