ஆப்நகரம்

பள்ளிகள் திறப்பு: தீபாவளிக்கு பிறகு மாணவர்கள் வரலாம் - அமைச்சர் முக்கிய தகவல்

தமிழகத்தில் ஆரம்ப பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 24 Oct 2021, 8:21 pm
தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்காக பள்ளிகளை மாநில அரசு திறந்துள்ளது. அதனை தொடர்ந்து ஆரம்ப பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வந்த நிலையில், முதல்வர் தலைமையில் தொடர்ந்து பல கட்டங்களாக ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.
Samayam Tamil கோப்புப்படம்


இந்நிலையில், நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்த சூழலில், ஆரம்ப பள்ளிகள் திறப்புக்கான நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.

திருச்சி அரியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற கொரோனா குறித்த ஓவியக் கண்காட்சியை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு சந்தித்த அவர் கூறியதாவது, நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு கட்டாயம் வரவேண்டும் என்பதில்லை. தீபாவளிக்கு பிறகு பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள் தீபாவளிக்கு பிறகு வரலாம். மாணவர்கள் காலை எழுவது, உணவருந்துவது, பள்ளிக்கு வருவது போன்ற ஒழுக்க நடவடிக்கைகளை போதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

தீபாவளிக்கு 20% போனஸ்: 10 சதவீதம் பத்தாது - போக்குவரத்து தொழிற்சங்கம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 45,000 பள்ளிகள் தமிழ்நாட்டில் உள்ளன. இதில் இந்தாண்டு 2.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர். மாணவர் சேர்க்கை அதிகமுள்ள பகுதிகளில் இடப் பிரச்சனையை தீர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வாறு இடப்பிரச்சினை எழும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அருகே உள்ள எண்ணிக்கை குறைவான மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் அமர வைக்கப்பட்டு பாடம் நடத்தும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

அடுத்த செய்தி