ஆப்நகரம்

கூடங்குளம் அணு உலை இயங்குகிறதா? மத்திய அரசு அளித்த பதில்!

கூடங்குளத்தில் செயல்பட்டுவரும் அணு உலையின் செயல்பாடு குறித்து மத்திய அரசு பதிலளித்துள்ளது.

Samayam Tamil 27 Nov 2019, 3:43 pm
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது அணு உலை இயங்கவில்லை எனக் கூறப்பட்ட நிலையில் மத்திய அரசு அதற்கு விளக்கம் அளித்துள்ளது.
Samayam Tamil கூடங்குளம் அணு உலை இயங்குகிறதா


ஏற்கனவே 6, இப்போ 3 - மொத்தம் 33; தமிழகத்தில் குவியும் அரசு மருத்துவக் கல்லூரிகள்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி இந்த விவகாரத்தை மக்களவையில் எழுப்பினார்.

அடேயப்பா.. ஏழு மாவட்டங்களுக்கு கனமழை!

“கூடங்குளத்தில் இரண்டாவது அணு உலை நிறுத்தப்பட்டுவிட்டதாக கூறப்படுவது உண்மையா, அவ்வாறு இயங்கவில்லை என்றால் தமிழ்நாட்டு மின்சாரத் தேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா, அதை போக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன” என்று நவாஸ் கனி விளக்கம் கேட்டார்.

இந்த கேள்விகளுக்கு பிரதமர் அலுவலகத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்தார்.

அதிமுகவில் அஜித்: அலப்பறையை கொடுத்த மதுரை ரசிகர்!

“கூடங்குளத்தின் இரண்டாவது அணு உலை இயங்கிவருவதுடன் 65 % மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. ஜெனரேட்டர் ஸ்டேட்டரை மாற்ற திட்டமிட்டுள்ளோம். டிசம்பர் 2019இல் அடுத்ததாக எரிபொருள் நிரப்புவோம் அப்போது ஜெனரேட்டர் ஸ்டேட்டரை மாற்றுவோம். அதன்பின் முழு சக்தியுடன் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி