ஆப்நகரம்

கலப்பு திருமணம் செய்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை: வெளியாகுமா அசத்தல் அறிவிப்பு?

அரசு வேலைவாய்ப்பில் கலப்பு திருமணம் செய்து கொண்டோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என எம்.பி.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 8 Jun 2021, 3:46 pm
சமூக நீதியை நிலைநாட்டும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மேற்கொண்டு வருகிறது.
Samayam Tamil mk stalin inter cast marriage


கடந்த அதிமுக ஆட்சியில் கைவிட்ட பல திட்டங்களுக்கு உயிர்கொடுக்கும் பணிகளும் நடைபெறுகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் 100 நாள்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு நேற்று தெரிவித்தார். இது கடந்த அதிமுக ஆட்சியில் காணாமல் போன திட்டமாகும்.

ஆகஸ்ட்டில் அதிமுகவில் பெரு வெடிப்பு? சசிகலா என்ட்ரிக்கு நாள் குறிச்சாச்சா!

இந்நிலையில் திமுக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விசிக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் விடுத்துள்ளார். கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை என எம்ஜிஆர் காலத்தில் கொண்டுவரப்பட்ட அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ரவிக்குமார் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசுப் பணிக்கு நியமனம் செய்யும்போது முன்னுரிமை தரப்பட வேண்டியவர்களின் பட்டியலில் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களைச் சேர்த்து தமிழக அரசு 1986ஆம் ஆண்டு ஆணையிட்டுள்ளது.

உலகம் சுற்றிய மாஜிக்கள்: ஊழல் பட்டியல் ரெடி - முதலில் சிக்குவது யார்?

2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை அன்றைய திமுக ஆட்சியின்போது தமிழக அரசின் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தின்போது கலப்புத் திருமணம் செய்துகொண்ட 287 பேர் பணி நியமனம் பெற்று இருந்தனர். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக கலப்புத் திருமணம் செய்துகொண்ட எவரும் ஆசிரியர் பணியில் நியமனம் செய்யப்படவில்லை.
மாதம் 3000 ரூபாய்: முதல்வர் தொடங்கிய அதிரடி திட்டம்!
மறைந்த முதல்வர் எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தைக் கடந்த அதிமுக அரசு செயல்படுத்தவில்லை. சமூக அக்கறை கொண்ட தங்களது தலைமையிலான அரசு இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உரிய ஆணை வழங்குமாறு வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி