ஆப்நகரம்

10ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் வழங்க லஞ்சம் கேட்கும் தனியார் பள்ளிகள்?

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக மதிப்பெண்கள் வழங்க தனியார் பள்ளிகள் பணம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

Samayam Tamil 12 Jun 2020, 3:28 pm
தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. எனினும், கொரோனா பாதிப்புகள் தமிழகத்தில் அதிகரித்து வருவதால், பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதையடுத்து, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்த தமிழக அரசு, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் அறிவித்துள்ளது. மேலும், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், வருகை அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்பட்டு மாணவர், மாணவிகள் தேர்ச்சி அளிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணிகளை அரசு தேர்வுகள் இயக்ககம் தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள், தங்களது பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவேடு விவரங்களை அந்தந்த மாவட்ட கல்வி அலுவவரிடம் இன்று மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணி: பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!!

இந்த நிலையில், 10ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் வழங்க பணம் கேட்பதாக தனியார் பள்ளிகள் மீது புகார் எழுந்துள்ளது. அதிக மதிப்பெண் வழங்க ரூ.50,000 வரை பணம் கேட்பதாக கூறப்படுகிறது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில் தனியர் பள்ளிகள் லஞ்சம் கேட்டு பண வேட்டையில் ஈடுபடுகின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி