ஆப்நகரம்

மாணவர்கள் போராட்டம் நடத்த தடை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டங்கள் நடத்த தடை கோரிய மனு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Samayam Tamil 3 Feb 2020, 12:58 pm
சென்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டங்கள் நடத்த தடை கோரிய மனு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்


குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதனை ஆளும் பாஜக அரசு சட்டமாக்கியுள்ளது. எனினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என அஞ்சுவது, இலங்கையில் இருந்து தமிழகத்தில் குடியேறிய அகதிகளை இடம்பெறாதது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கல்வி நிறுவன வளாகங்களிலோ, பொது இடங்களிலோ மாணவர்கள் போராட்டங்கள் நடத்த தடை விதிக்க கோரி வராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அண்ணா நினைவு நாள்: திமுக நடத்திய அமைதிப் பேரணி!

அதில், மாணவர்கள் போராட்டத்தால் அவர்களின் படிப்பு மட்டுமல்லாமல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால் பொது மக்களும் பாதிக்கப்படுகின்றனர். அரசியல் கட்சியினரால் மூளைச் சலவை செய்யப்பட்டு, பல்கலைக்கழக விதிகளுக்கு முரணாக செயல்படும் மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

காவிரி குண்டாறு திட்டம்: இந்த ஆண்டு தொடக்கம் - விஜயபாஸ்கர் உறுதி!

இந்த மனு மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், மனு தொடர்பாக வருகிற மார்ச் 2ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கும், தமிழக டிஜிபி, சென்னை மாநகர ஆணையர், சென்னை பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அடுத்த செய்தி