ஆப்நகரம்

கீழடியில் மத்திய அமைச்சர்கள் வருகைக்கு எதிர்ப்பு

கீழடியில் அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்தை மத்திய அமைச்சர்கள் இன்று பார்வையிடுவதற்கு மே 17 இயக்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

TNN 28 Apr 2017, 3:31 pm
கீழடியில் அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்தை மத்திய அமைச்சர்கள் இன்று பார்வையிடுவதற்கு மே 17 இயக்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
Samayam Tamil protest against central ministers to visit keezhadi excavation
கீழடியில் மத்திய அமைச்சர்கள் வருகைக்கு எதிர்ப்பு


மதுரை மாவட்டம் கீழடியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு சார்பில் அகழ்வாராய்ச்சி நடத்துவருகிறது. இந்த ஆய்விற்கு அமர்நாத் என்பவர் தலைமை வகித்தார். அவரை அண்மையில் அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டு, ஸ்ரீராம் என்பவர் கீழடி அகழ்வாராய்ச்சியின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் முந்தைய பழமை வாய்ந்த நாகரிகம் தமிழர்களுடையது என்பதை இந்த ஆய்வு வெளிக்காட்டியுள்ளதால், தமிழர்களின் பாரம்பரியப் பெருமையை மறைக்க மத்தி அரசு முயல்கிறது என்று எதிர்ப்பு எழுந்தது. இரண்டு ஆண்டுகளாக கீழடி ஆய்வுக்களத்தில் இருந்த அதிகாரியை மாற்றுவதற்கு எந்த அவசியமும் இல்லை என்றும் குரல் எழுந்தது.

இந்நிலையில், இன்று மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் மகேஷ் சர்மா ஆகியோர் கீழடியில் ஆராய்ச்சி நடக்கும் இடத்தை பார்வையிட வருவார்க்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்களது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 17 இயக்கத்தினரும் சமூக ஆர்வலர்களும் கீழடியில் போராட்டம் நடத்தினர். அங்கு வந்த காவல்துறையினர் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.

அடுத்த செய்தி