ஆப்நகரம்

நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தை விட்டே விரட்டுவோம்: திருமுருகன் காந்தி!

ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தை விட்டு விரட்ட விரிவான போராட்டம் நடத்தப்படும் என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 4 Mar 2018, 8:46 am
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தை விட்டு விரட்ட விரிவான போராட்டம் நடத்தப்படும் என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil protest against sterlite will extend over tamilnadu says thirumurugan gandhi
நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தை விட்டே விரட்டுவோம்: திருமுருகன் காந்தி!


தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலை, தனது விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூடக் கோரியும் அப்பகுதி மக்கள் 21 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஸ்டெர்லைட் ஆலை அருகே உள்ள குமரெட்டியாபுரம் கிராமத்திற்கு சென்றார்.

அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்த அவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை காற்றையும், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தி வருகிறது.

இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல், தலைவலி, முடக்கம், கண்பார்வை குறைபாடு முதல் புற்றுநோய் வரை ஏற்படுகிறது. மேலும் ஆலையில் பயன்படுத்தும் தொழில்நுட்பம் சர்வதேச அலவில் தடை செய்யப்பட்ட ஒன்று.

மக்கள் எதிரான திட்டங்களைக் கொண்டு வந்து, மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தை கார்ப்பரேட்டுகளின் குப்பைத் தொட்டியாக மாற்றியுள்ளன.

ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தை விட்டே விரட்ட, களம் கண்டு மக்களுக்கு ஆதரவாக மே 17 இயக்கம் விரிவான போராட்டத்தில் ஈடுபடும் என்று திருமுருகன் காந்தி தெரிவித்தார்.

Protest against sterlite will extend over tamilnadu says Thirumurugan Gandhi.

அடுத்த செய்தி