ஆப்நகரம்

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி விசிக-வினர் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் கெருடா முத்தூர் பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரி, பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர்.

Samayam Tamil 8 Mar 2019, 5:00 pm
திருப்பூர் மாவட்டம் கெருடா முத்தூர் பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரி, விடுதலை சிறுத்தை கட்சியினர் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
Samayam Tamil தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி விசிக-வினர் போராட்டம்!
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி விசிக-வினர் போராட்டம்!


திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கெருடா முத்தூர் பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் வசிக்க கூடிய வீட்டின் மேல் உயர் மின் அழுத்த கம்பிகள் செல்வதாகவும், அடிப்படை வசதிகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் பொது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு சமுதாயக்கூடம், கழிப்பறை வசதி, முறையான பேருந்து வசதிகள் கட்டித்தர கோரி பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்ததும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ்முத்து தலைமையில் 100க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் களைந்து சென்றனர்.

திடீர் முற்றுகை போராட்டத்தினால் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி