ஆப்நகரம்

மதுரை தமுக்கத்தில் ஹைட்ரோவுக்கு ஏதிராக மாணவர்கள் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஏதிராக மதுரை தமுக்கம் மைதானத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

TNN 28 Mar 2017, 5:46 pm
மதுரை : ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஏதிராக மதுரை தமுக்கம் மைதானத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
Samayam Tamil protest initiated at thamukkam madurai savefarmers savetn saynotohydrocarbonproject
மதுரை தமுக்கத்தில் ஹைட்ரோவுக்கு ஏதிராக மாணவர்கள் போராட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு,தனியார் நிறுவனங்களுடன் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததற்காக, ஏதிர்ப்பு தெரிவித்து மதுரை தமுக்கம் மைதானத்தில் 20-க்கு மேற்பட்ட மாணவ , மாணவிகள் இன்று போராட்டம் நடத்தினார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு வழிவகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்றுடெல்லியில் கையெழுத்தானது.31 நிறுனங்களுடன் மத்திய அரசு இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இதன் மூலம் நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான திட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஜெம் லெபாரெட்ரிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக நல்லாண்டார் கொல்லை, வடகாடு உள்ளிட்ட இடங்களில் சுமார் மூன்று வாரங்கள் நீடித்த போராட்டம் கடந்த 25-ம் தேதி தற்காலிகமாக நிறைவு பெற்றது.

Protest initiated at #Thamukkam , #madurai #saveFarmers #SaveTN #SayNoToHydroCarbonProject

அடுத்த செய்தி