ஆப்நகரம்

தமிழகத்திலும் தர்ணா நடந்திருக்க வேண்டும்- கமல்

மம்தா பானர்ஜி தர்ணா மேற்கு வங்கத்தில் நடத்தியதைப் போல தமிழகத்திலும் தர்ணா நடந்திருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. அவ்வளவு அழுத்தம் மேலிருந்து வருவதை சுயமரியாதையுள்ள எந்த அரசும் இதுபோன்ற அழுத்தத்தை ஏற்றுக்கொள்ளாது என்றார் கமல்.

Samayam Tamil 4 Feb 2019, 9:49 pm
கோவை விமான நிலையத்தில் மக்கள் நீதி மையத் தலைவர் கமல்ஹாசன் பேட்டி
Samayam Tamil kamal pressmeet

யளித்தார். 'பொள்ளாச்சியில் கட்சி நிகழ்ச்சிக்காக வந்துள்ளேன். மம்தா பானர்ஜி தர்ணா மேற்கு வங்கத்தில் நடத்தியதைப் போல தமிழகத்திலும் தர்ணா நடந்திருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. அவ்வளவு அழுத்தம் மேலிருந்து வருவதை சுயமரியாதையுள்ள எந்த அரசும் இதுபோன்ற அழுத்தத்தை ஏற்றுக்கொள்ளாது
.
வாக்கிச்சீட்டு முறை தொடர்பான கேள்விக்கு, நவீனத்தை ஏளனப்படுத்தக் கூடாது. ஓட்டையுள்ள பக்கெட்டில் தண்ணீர் எடுக்கக்கூடாது .ஆனால் ஓட்டை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

காட்டு யானை சின்னதம்பியை கும்கியாக மாற்றும் முயற்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,
மிருகங்களின் இடத்தை நாம் ஆக்கிரமிப்பது பேராசையின் உச்சகட்டம். அதற்கான விளைவுகளை நாம் ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்

. சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றுவது தொடர்பாக வனத்துறை அமைச்சர் மற்றும் நீதிமன்றத்தில் அரசு பதில் ஆகியவற்றில் உள்ள முரண்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல், ’அது அவர்களின் தனி குணாதிசியம். இதில் வியப்பு இல்லை. அவர்கள் இரு நாக்குடையவர்கள்' என்றார்.

அடுத்த செய்தி