ஆப்நகரம்

பேரையூரில் உள்ள தீண்டாமை சுவரை அகற்ற பொதுமக்கள் தொடர் போரட்டம்!

பேரையூர் அருகே தீண்டாமை சுவரை அகற்றக்கோரி ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Samayam Tamil 4 Feb 2018, 12:28 pm
பேரையூர் அருகே தீண்டாமை சுவரை அகற்றக்கோரி ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil protest to abolish untouchability wall in peraiyur
பேரையூரில் உள்ள தீண்டாமை சுவரை அகற்ற பொதுமக்கள் தொடர் போரட்டம்!


பேரையூரில் சந்தையூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள இந்திரா காலனியில் இரு சாதியை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றர். அதில் ஒரு சாதியை சேர்ந்தவர்கள் மற்றவர்களுக்கு எதிராக சுவர் கட்டியுள்ளனர். இந்த தடுப்புச் சுவரால் போக்குவரத்து அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மற்றொரு சாதியினர் இந்த சுவரை அகற்ற பல விதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பட்டினி போரட்டம், கண்களை கட்டி போராடுவது போன்று பல விதமாக போரட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று மண்டையோடு , எலும்புகளை வாயில் கவ்வியவாறு தங்கள் போராட்டத்தை நடத்தினர். மேலும் மலைப்பகுதியில் போராட்டம் நடத்துவதால் போராட்டக்கார்களுக்கு அதிக உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போராட்டக் குழுவினர் கூறியதாவது :
2018 ஆண்டிலும்கூட தீண்டாமை என்ற பெயரில் நாங்கள் எடுக்கப்படுகிறோம். இந்திரா காலனியில் உள்ள தீண்டாமை சுவரை அகற்றும் வரை அமைதியான முறையில் போராடுவோம் .

அடுத்த செய்தி