ஆப்நகரம்

மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்: கோடை விடுமுறை ரத்தா?

தமிழ்நாட்டில் இந்த கல்வி ஆண்டில் பொதுத் தேர்வுகள் தள்ளிப் போகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் கோடை விடுமுறை உண்டா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Samayam Tamil 18 Nov 2021, 3:05 pm
கொரோனா பயம் மெல்ல குறையத் தொடங்கிய நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12 ம் வகுப்புகளுக்கும், அடுத்தகட்டமாக நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
Samayam Tamil tn school students


ஆன்லைன் மூலமாகவே தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் நேரடி வகுப்புகள் தொடங்கிய சிறிது காலத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்புகள் சரிவர நடைபெற முடியாத நிலையில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தள்ளிப் போகும் என கூறப்படுகிறது. கடந்த கல்வி ஆண்டில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சியடைவதாக அறிவிக்கப்பட்டது.
வெள்ளம் நிவாரணம் ரூ.10,000: தமிழக அரசு அறிவிப்பு எப்போது?
9, 10, 11ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என மட்டும் பதிவுசெய்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இம்முறை பொதுத் தேர்வை கட்டாயம் நடத்திட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 10, 11, 12ம் வகுப்புகளுக்கு வழக்கமான மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்திடாமல், மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வசதியாக மே மாதத்தில் பொதுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிக கனமழை: இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!
பிற வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுக்கு பதிலாக திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மே மாதம் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நடைபெறுவதால் அதன் பின்னர் பிற வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு நடைபெற்றால் இம்முறை கோடை விடுமுறை இருக்காது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அடுத்த செய்தி