ஆப்நகரம்

தமிழகம் மக்களின் மனநிலை மோடிக்கு எதிராக உள்ளது – நாராயணசாமி

தமிழகம், புதுச்சேரி மக்களின் மனநிலை நரேந்திரி மோடிக்கு எதிராக இருப்பதாக புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி கருத்து தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 28 Apr 2019, 4:55 pm
தமிழகம், புதுச்சேரி மக்களின் மனநிலை நரேந்திரி மோடிக்கு எதிராக இருப்பதாக புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி கருத்து தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Narayanasamy-cm.jpg.image.975.568


மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமிதரிசனம் செய்ய வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, நடைபெற்ற தேர்தலில் தமிழக மற்றும் புதுச்சேரி மக்களின் மனநிலை மோடிக்கு எதிராக இருந்தது. மோடி ஆட்சியில் எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை.

விவசாயிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை மோடி அரசு வழங்கவில்லை. மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதால் மோடியை தூக்கி எரிய தயாராகி வாக்களித்துள்ளனர்.

ராகுல்காந்தி பிரதமரானால் தான் தென் மாநிலத்தின் உரிமைகள் மீட்கப்படும் என்ற எண்ணத்தில் வாக்களித்துள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி உறுதி. தமிழக மக்கள் மோடி, எடப்படியை நிராகரித்து வாக்களித்துள்ளனர். 4 தொகுதி இடைத்தேர்தலில் வெல்வோம். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிச்சயமாக ஆட்சி அமைக்கும்.

மோடி தமிழகத்தை புறக்கணித்துவிட்டார் என்பதை தமிழக மக்கள் புரிந்து வாக்களித்துள்ளனர். ஃபானி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பேரிடர் மீட்புதுறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் தயாராக உள்ளனர். சபாநாயகர் தனி அதிகாரம் பெற்றவர். ஸ்டாலின் அறிக்கையை பார்க்கும் போது தோல்வி பயம் வந்து இது போன்ற நடவடிக்கைகளை அதிமுக அரசு செய்துவருகிறது.

சபாநாயகர் எல்லை மீறி நடக்ககூடாது என்பது தெரிகிறது 18 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் கட்சி மாறி செயல்பட்டதாக கூறி விதிமுறைகள்படி நடவடிக்கை எடுக்கவில்லை. ஜனநாயக படுகொலை தன்னிச்சையாக முடிவு செய்துள்ளார். சட்டபேரவையில் திமுக கூட்டணிக்கு அருதிபெரும்பான்மை கிடைக்கும். ஓபிஎஸ் வாரணாசிக்கு சென்று எந்த மொழியில் பேசினார். கட்சி முடிவெடுக்கவில்லை என்பதால் வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை. தென்மாநிலங்களை மோடி புறக்கணித்த காரணத்தினால் ராகுல்காந்தி கேரளாவில் போட்டியிடுகிறார் என்று தொிவித்தாா்.

அடுத்த செய்தி