ஆப்நகரம்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும்: நாராயணசாமி

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 18 Sep 2018, 12:47 pm
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil 201809171649205734_Eligibilty-age-criteria-for-joining-police-increased--_SECVPF


பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தபடியே உள்ளது. 80 ரூபாயைக் கடந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், மத்திய அரசு கலால் வரியைக் குறைத்து பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்கும் திட்டத்தையும் கைவிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துக்கொண்டே போகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்துவது அரசின் கையில் இல்லை என மத்திய அரசு கூறிவருகிறது.

காங்கிரஸ் தரப்பில் இதனைக் கண்டித்து செப் 10ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டமும் நடைபெற்றது. விரைவில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை எட்டப்போகிறது என வாடிக்கையாளர்கள் கவலையில் உள்ளனர்.

இந்நிலையில், “மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பெட்ரோல், டீசல் விலை உயருகிறது. பெட்ரோல், டீசல் விலை குறைய அதன் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்” என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியிறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி