ஆப்நகரம்

புதிய கல்விக் கொள்கை இங்கே வேலைக்கு ஆகாது... முதல்வர் தடாலடி!!

புதிய கல்விக் கொள்கை குறித்து, பொதுமக்களிடம் கருத்துக் கேட்ட பின்பே அதனை அமல்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 2 Aug 2020, 4:55 pm
மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு, நாடு முழுவதும் பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil puducherry cm


இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர், "கல்வியில் மும்மொழி கொள்கையை திணிப்பதை புதிய கல்விக் கொள்கை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது" கடும் கண்டனத்துக்குரியது என்ற கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்து, புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியது:
புதிய கல்விக் கொள்கையின் மூலம் சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இதனை புதுச்சேரி மாநிலம் ஒருபோதும் அனுமதிக்காது.

புதிய கல்விக் கொள்கையை ஏன் தமிழ்நாடு எதிர்க்கிறது? காரணம் இதுதான்!

இக்கல்விக் கொள்கையால் புதுச்சேரி மாநிலத்துக்கோ, மக்களுக்கோ எவ்வித நன்மையும் விளைந்துவிட போவதில்லை. எனவே, இதுகுறித்து மாநில மக்களிடம் கருத்து கேட்கப்படும். அதன் பிறகே புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும்.

கொரோனா அச்சம் காரணமாக, பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள சூழலில், மாணவர்கள் கல்வி பயில மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும்.

NEP 2019: மனப்பாட முறைக்கு முடிவு கட்டும் புதிய கல்விக் கொள்கை

புதுச்சேரியில் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாவோருக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது என்று நாராயணசாமி தெரிவித்தார்.

அடுத்த செய்தி