ஆப்நகரம்

புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ, பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு..!

புதுச்சேரி மாநில அதிமுக எம்.எல்.ஏவான ஓம் சக்தி சேகர்,ஓ.பன்னீர் செல்வத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

TNN 9 Feb 2017, 9:36 pm
புதுச்சேரி மாநில அதிமுக எம்.எல்.ஏவான ஓம் சக்தி சேகர்,ஓ.பன்னீர் செல்வத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil puducherry om sakthi sekar supports ops
புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ, பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு..!


சசிகலா அதிருப்தியாளர்களாக உள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள்,தமிழக முதல்வரான ஓ.பி.எஸ்க்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.இதுவரை ஐந்து அதிமுக எம்.எல்.ஏக்கள்,ஒரு எம்.பி ஓ.பி.எஸ்சின் ஆதரவு அணியில் உள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரி மாநில அதிமுக எம்.எல்.ஏவான ஓம் சக்தி சேகர்,இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பி.எஸ்சின் வீட்டிற்கு சென்று தனது ஆதரவை தெரிவித்தார்.

சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ் போர்க்கொடி உயர்த்தியதிலிருந்து,ஓம் சக்தி சேகரும் சசிகலாவுக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு வந்தார்.இதனைத் தொடர்ந்து நேற்று ஓம் சக்தி சேகர்,அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ்சை நேரில் சந்தித்து தனது ஆதரவை ஓம் சக்தி சேகர் தெரிவித்துள்ளார்.

ஓம் சக்தி சேகர் புதுச்சேரி எம்.எல்.ஏ என்பதால்,அவரது ஆதரவு ஓ.பி.எஸ்க்கு எந்த பயனையும் தரப் போவதில்லை.

Puducherry Om Sakthi Sekar supports OPS

அடுத்த செய்தி