ஆப்நகரம்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழ்நாட்டு மக்களுக்கு ஷாக் நியூஸ்!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் மழை குறையும் என புவியரசன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 9 Jul 2021, 3:15 pm
ஜூலை 11 ஆம் தேதி வடக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இதனால் தமிழ்நாட்டில் மழை வெகுவாக குறையும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tn rain


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக்: தமிழ்நாடு முழுக்க இதுதான் நிலைமை!அப்போது பேசிய அவர் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் வரும் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடிய பகுதிகளின் விவரத்தை தெரிவித்தவர், வரும் 11ஆம் தேதி வடக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், உருவாகும் பட்சத்தில் அதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு வெகுவாக குறையும் என தெரிவித்தார்.

தென்மேற்கு பருவக்காற்று வலுவிழந்த காரணத்தினால் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இந்த பருவமழை காலத்தில் அதிகமாக மழை கிடைத்துள்ளது எனவும் இயல்பாக இந்த பருவகாலத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை 130.2 மி.மீ மழை தமிழ்நாட்டில் பெய்யும். ஆனால் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை (ஜூலை 9ஆம்) தமிழகத்தில் 127.5 மி.மீ மட்டுமே மழை பதிவாகி உள்ளது என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்? எதற்கெல்லாம் வாய்ப்பு?

வரும் நாட்களில் தென்மேற்கு பருவக்காற்று வலுவடையும் காரணத்தால் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கேரள கர்நாடகப் பகுதிகளில் அதிக மழை பெய்யக் கூடிய வாய்ப்பு உள்ளது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்யக் கூடிய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி