ஆப்நகரம்

பார்வையற்றோருக்கு தரமான எழுத்தர்: அரசு சாரா அமைப்பு வலியுறுத்தல்

பரீட்சையின் போது பார்வை குறைபாடு உள்ளோர் சொல்வதை எழுதுவதற்கு தரமான எழுத்தர்களை நியமனம் செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த, தமிழக பள்ளி கல்வி துறை மற்றும் பள்ளி தேர்வுகள் இயக்குனரகத்தை நேத்ரோதயா என்ற அரசு சாரா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

TOI Contributor 26 Feb 2016, 5:51 pm
சென்னை: பரீட்சையின் போது பார்வை குறைபாடு உள்ளோர் சொல்வதை எழுதுவதற்கு தரமான எழுத்தர்களை நியமனம் செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த, தமிழக பள்ளி கல்வி துறை மற்றும் பள்ளி தேர்வுகள் இயக்குனரகத்தை நேத்ரோதயா என்ற அரசு சாரா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
Samayam Tamil qualified scribes for visually challenged ngo urged to tndse
பார்வையற்றோருக்கு தரமான எழுத்தர்: அரசு சாரா அமைப்பு வலியுறுத்தல்


வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வுகளில், பார்வை குறைபாடு உள்ளோரின் சார்பில் அவர்கள் சொல்வதை எழுதுவதற்காக தரமான எழுத்தர்களை நியமிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வி துறை மற்றும் பள்ளி தேர்வுகள் இயக்குனரகத்தை நேத்ரோதயா என்ற அரசு சாரா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி