ஆப்நகரம்

வினாத்தாளேயே மாத்திட்டாங்க: எங்களால் தேர்வு எழுத முடியாது என்று வெளியேறிய தேர்வர்கள்

நெல்லையில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் வினாத்தாள் மாற்றி கொடுக்கப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

TNN 3 Jul 2017, 3:14 pm
தமிழகம் முழுவதும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தது. நெல்லை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 22 மையங்களில், கிட்டத்தட்ட 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர். அதில், ஓரிரு மையங்களில் தேர்வு வினாத்தாள் மாற்றி கொடுக்கப்பட்டதால் அவர்கள் குழப்பம் அடைந்தனர்.
Samayam Tamil question paper was changed in nellai center in trb exam
வினாத்தாளேயே மாத்திட்டாங்க: எங்களால் தேர்வு எழுத முடியாது என்று வெளியேறிய தேர்வர்கள்


நெல்லை மேரி ஜர்ஜெண்ட் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் பாடத்திற்கான தேர்வு நடந்தது. அந்த தேர்வில் வரலாறு தேர்வு எழுத தேர்வர்கள் வந்தனர். அவர்களுக்கு தமிழுக்குரிய தேர்வு வினாத்தாள் வழங்கப்பட்டதால் அவர்கள் என்ன செய்வது என்று திகைத்தனர். எங்களுக்கு வரலாறு தேர்வுக்குறிய வினாத்தாளை வழங்க வேண்டும் என அவர்கள் கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர்.



ஆனால், கண்காணிப்பாளர் அவர்களிடமிருந்து வினாத்தாள் மற்றும் விடைத்தாள் சீட்டை வாங்கிக் கொண்டு அவர்களை வெளியில் அனுப்பி வைத்தனர். இங்கு தமிழ் வினாத்தாள் மட்டுமே இருக்கிறது. அதனால், நீங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்று முறையிட வேண்டும் என்று கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர். இதன் விளைவாக வரலாறு தேர்வர்கள், தேர்வு எழுத முடியாமல் அங்கிருந்து வெளியேறினர்.

இதேபோல் மற்றொரு தேர்வு மையத்தில் வணிகவியல் தேர்வு எழுத வந்த ஒருவருக்கு ஆங்கில வினாத்தாள் வழங்கப்பட்டதால் அவர் வெளியேறினார்.

அடுத்த செய்தி