ஆப்நகரம்

ராதாபுரம் தேர்தல் வழக்கு; ஜனவரிக்கு ஒத்தி வைப்பு

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டதுடன், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

Samayam Tamil 12 Dec 2019, 7:41 pm
டெல்லி: ராதாபுரம் தேர்தல் வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
Samayam Tamil உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்


கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் அப்பாவு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பதுரையை விட 49 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை தழுவினார்.

இதையடுத்து, இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், 203 தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை எனவும், சில சுற்றுகளில் எண்ணப்பட்ட வக்குகளில் முறைகேடு நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வாக்குப்பதிவு எந்திரங்களில் 19, 20, 21 ஆகிய மூன்று சுற்றுகளில் பதிவான வாக்குகள் மற்றும் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டது.

ராதாபுரம் வழக்கு: டிசம்பர் 11ஆம் தேதி இறுதி விசாரணை-உச்ச நீதிமன்றம்

அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் நியமித்த ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் முன்னிலையில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்துள்ளது.

இதனிடையே, மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் இன்பதுரை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டதுடன், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது.

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகள் எப்போது தெரியும்? - உச்ச நீதிமன்றம்!

வழக்கு விசாரணையின் போது, அப்பாவு, இன்பதுரை தரப்பில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது. அதையடுத்து, இந்த வழக்கின் இறுதி விசாரணை டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஆனால், தனக்கு வேறு ஒரு அலுவல் இருப்பதால் வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என இன்பதுரை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

அதனையேற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் ராதாபுரம் தேர்தல் வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.

அடுத்த செய்தி