ஆப்நகரம்

ரயில்வே பட்ஜெட்: தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட திட்டங்கள்

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.2,064 கோடி மதிப்பிலான திட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

TNN 25 Feb 2016, 5:35 pm
சென்னை: ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.2,064 கோடி மதிப்பிலான திட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil rail budget rs 2064 crore allocated for projects in tamil nadu
ரயில்வே பட்ஜெட்: தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட திட்டங்கள்


மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, 2016-2017 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அதில், தமிழகத்துக்கு ரூ.2,064 கோடி மதிப்பிலான திட்டங்கள் ஒதுக்கீடு செய்யபப்ட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மொரப்பூர் - தருமபுரி இடையேயான 36 கி.மீ. புதிய ரயில் பாதைக்கு ரூ.134 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரான அன்புமணி மற்றும் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் இந்த திட்டத்தை நிறைவேற்ற அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதேபோல, நீண்டநாள் எதிர்பார்ப்பான திண்டுக்கல் - சபரிமலை இடையே 201 கி.மீ. நீளமுள்ள புதிய ரயில் பாதைக்கு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள ரூ.30 கோடியும், தஞ்சாவூர் - விழுப்புரம் இடையே மயிலாடுதுறை வழியாக உள்ள ரயில் பாதையை மின்மயமாக்க ரூ.250.8 கோடியும் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யபப்ட்டுள்ளது.

மேலும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலம் மாவட்டம் ஓமலூருக்கு ஒசூர் வழியாக உள்ள ரயில் பாதையை மின்மயமாக்க ரூ.152.83 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 84 புதிய சுரங்கப் பாதைகள் அமைக்கவும், 13 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கவும் நிதி ஒதுக்கபப்ட்டுள்ளது.

அடுத்த செய்தி