ஆப்நகரம்

விவசாயிகள் மறியல்: இன்றும் சில ரயில்கள் ரத்து

காவிரி மேலாண்மை அமைக்கக் கோரி விவசாயிகள் செய்த ரயில் மறியல் போராட்டத்தால் நேற்று 16 ரயில்கள் ரத்து செய்யபட்டு இருந்த நிலையில் இன்றும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், சில ரயில்கள் பாதி தூரத்திற்கும் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

TOI Contributor 18 Oct 2016, 10:43 am
காவிரி மேலாண்மை அமைக்கக் கோரி விவசாயிகள் செய்த ரயில் மறியல் போராட்டத்தால் நேற்று 16 ரயில்கள் ரத்து செய்யபட்டு இருந்த நிலையில் இன்றும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், சில ரயில்கள் பாதி தூரத்திற்கும் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
Samayam Tamil rail roko cauvery issue trains cancelled because of 2nd day rail roko by farmers
விவசாயிகள் மறியல்: இன்றும் சில ரயில்கள் ரத்து

இன்று, கோவை-மன்னார்குடி செம்மொழி எக்ஸ்பிரஸ் (16616), சென்னை எழும்பூர்- திருச்சி எக்ஸ்பிரஸ் (16853), திருச்சி-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16854) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

காரைக்கால்-பெங்களூரு பயணிகள் ரயில் (56513) காரைக்கால்-சிதம்பரம் இடையே பாதி தூரம் மட்டுமே இயக்கப்படும். சென்னை எழும்பூர்-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் (16859) நேற்று எழும்பூர்-திருச்சி இடையே பாதி தூரம் மட்டும் இயக்கப்பட்டது. பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரயில் (56514), நேற்று சிதம்பரம்-காரைக்கால் இடையே பாதி தூரம் மட்டுமே இயக்கப்பட்டது. இன்றும் தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம் ஆகிய இடங்களில் விவசாயிகள் ரயில்களை மறித்து, ரயில் மீது ஏறி அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

முதல் நாளான நேற்று, ரத்து செய்யப்பட்ட16 ரயில்களில் முன் பதிவு செய்து இருந்தவர்கள் பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி