ஆப்நகரம்

ரயில் நிலையத்தில் தவறிய 60 சவரன் நகைகள்; உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீஸ்!

60 சவரன் நகைகளை தவறவிட்ட பயணியிடம், ரயில்வே போலீசார் மீண்டும் கொண்டு சேர்த்துள்ளனர்.

Samayam Tamil 11 Sep 2018, 3:39 pm
சென்னை: 60 சவரன் நகைகளை தவறவிட்ட பயணியிடம், ரயில்வே போலீசார் மீண்டும் கொண்டு சேர்த்துள்ளனர்.
Samayam Tamil Railways


சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரு பெண்ணின் கைப்பை கேட்பாரற்று கிடந்துள்ளது. இதைக் கண்ட ஒருவர், ரயில்வே பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்துள்ளார்.

உடனே தமிழக ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பையை சோதனையிட்டனர். அதில் 60 சவரன் தங்க நகைகள், செல்போன், ரூ.2,500, ஏடிஎம் ஆகியவை இருந்தன.

இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெபவேல்ராஜ் என்பவரின் பை என்று தெரியவந்துள்ளது.

இருப்பினும் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி, உரியவரிடம் பையை ஒப்படைத்தனர். அப்போது ரயில்வே போலீசாருக்கு மனமுருகி நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Railway Police handed over 60 sovereign jewellery to the owner.

அடுத்த செய்தி