ஆப்நகரம்

ரயில் நிலையங்களில் விற்கப்படும் டீ, காபி விலை உயர்த்த முடிவு! பயணிகள் அதிருப்தி

ரயில் நிலையங்களில் விற்கப்படும் டீ, காபி விலை உயர்த்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 20 Sep 2018, 10:55 pm
ரயில் நிலையங்களில் விற்கப்படும் டீ, காபி விலை உயர்த்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
Samayam Tamil irctc tea.


ரயில் டிக்கெட் விற்பனை முதல் டீ,காபி வரையில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் கவனித்து வருகிறது. இதற்கு கீழ் இயங்கும் கேண்டீன் தான் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் செயல்படுகிறது. இங்கு இதுவரையில் டீ காபி 7 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அவற்றின் விலை 10 ரூபாயாக உயர்த்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, 150 மிலி அளவு உடைய டீ பேக் தேநீரும் 170மிலி காபியும் இனி 10 ரூபாய்க்கு விற்க்ப்படும். இதற்கான சுற்றிக்கையை ஐஆர்டிசிக்கு ரயில்வே வாரியம் அனுப்பியுள்ளது. இந்த கட்டண மாற்றங்கள் ராஜதாணி மற்றும் சதாப்தி விரைவு ரயில்களில் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திடீர் விலை உயர்வால் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி