ஆப்நகரம்

தமிழகத்தின் சென்னை, கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வெதா்மேன்

வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிகத்தின் கடரோர மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதா்மேன் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 23 Aug 2018, 3:35 pm
வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிகத்தின் கடரோர மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதா்மேன் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Heavy rain


தென்மேற்கு பருவமழை கேரளா, கா்நாடகாவில் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதி தீவிரம் காட்டிய நிலையில் தற்போது மழை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு வெதா்மேன் வெளியிட்டுள்ள தகவலில், வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தொிவித்துள்ளாா்.

மேலும் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், கடலூா், வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், டெல்டா மாவட்டங்களான திருச்சி, பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், நாகை, திருவாரூா் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கேரளாவில் பருவமழை தற்போது ஓரளவு ஓய்ந்திருக்கும் நிலையில் தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பருவமழையால் பெரிய அளவில் மழை கிடைக்காத தமிழகத்தின் உள் மாவட்டங்களும் கூட இந்த பருவ மழை காலத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

பரவலாக மழை பெய்வதற்கான வசதிகள் அதிகம் கொண்ட இடத்தில் சென்னை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.

அடுத்த செய்தி