ஆப்நகரம்

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TOI Contributor 20 Dec 2016, 4:49 am
சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil rain fall expected in south districts of tamilnadu
தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!


சென்னை வழியாக சில நாட்களுக்கு முன் வர்தா புயல் சூறாவளியாக கரையை கடந்தது. இதன் பின் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவுகிறது. இந்நிலையில் அந்தமான் தீவு அருகே காற்று சுழற்சி ஒன்று புதிதாக உருவானது. இது மேற்கு வங்க கடல் பகுதிக்கு வந்த போது வலுப்பெற்று காற்றழுத்தமாக மாறியது. மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தது. இதனால் தமிழக கடலோரப் பகுதியில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், காற்றின் திசை மாறியதால் காற்றழுத்தம் வலுவிழந்தது. இதனால் தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, வட மாவட்டத்தில் லேசான மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

rain fall expected in south districts of tamilnadu

அடுத்த செய்தி