ஆப்நகரம்

தமிழகம், புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தென்கிழக்கு அரபிக்கடல் முதல் உள் கர்நாடகா வரை வளிமண்டல கீழ் அடுக்கில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 தினங்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Samayam Tamil 29 Jan 2019, 3:28 pm

ஹைலைட்ஸ்:

  • தென்கிழக்கு அரபிக்கடல் முதல் உள் கர்நாடகா வரை வளிமண்டல கீழ் அடுக்கில் காற்றழுத்த தாழ்வு நிலை நீட்டிப்பு
  • இதனால், தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 தினங்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil தமிழகம், புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
தமிழகம், புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு!தமிழகம், புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் இன்று கூறியிருப்பதாவது:

தென்கிழக்கு அரபிக்கடல் முதல் உள் கர்நாடகா வரை வளிமண்டல கீழ் அடுக்கில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 தினங்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

குமரி கடல் மன்னார் வளைகுடா பகுதியில் காற்றின் வேகம் 35 முதல் 45 கி.மீ வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில், 7 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அடுத்த செய்தி