ஆப்நகரம்

சென்னையில் மீண்டும் இன்றும் நாளையும் கனமழை!!

அந்தமான் கடற்பகுதியின் தென்கிழக்கே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் இன்றும் நாளையும் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

TOI Contributor 6 Nov 2017, 10:05 am
அந்தமான் கடற்பகுதியின் தென்கிழக்கே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் இன்றும் நாளையும் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Samayam Tamil rain in chennai coastal tn andhra pradesh to persist
சென்னையில் மீண்டும் இன்றும் நாளையும் கனமழை!!

தமிழத்தின் கடலோர மாவட்டங்களில் கடந்த மாத இறுதியில் இருந்து வடகிழக்குபருவ மழை பெய்து வருகிறது. மாநிலத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அந்தமான் கடற்பகுதியின் தென் கிழக்கே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதையடுத்து தமிழகம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு ஆந்திராவிலும் இன்று மழை இருக்கும். மேலும், நேற்று ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொண்ட மழை இன்று கனமழையாக வர வாய்ப்புள்ளது. மின்னலுடன் கூடிய மிதமான மழை அந்தமான், நிகோபர், தெற்கு கர்நாடகா, கேரளா, ராயல்சீமா மற்றும் தமிழத்தின் உள் மாவட்டங்களில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை வடகிழக்குப் பருவமழை 93 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. தெரிவித்துள்ளது.

Rain In Chennai, Coastal TN, Andhra Pradesh To Persist

அடுத்த செய்தி